என் நினைவில் சிவாஜி கணேசன்
நடிகர் என்று சொன்னதும் , உலகிலுள்ள எல்லோருடைய மனதிலும் நினைவிலும் வரகூடிய தமிழன் நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் .
நாடக உலகிலும் சினிமா உலகிலும் அறுபது ஆண்டு காலம் அயராது உழைத்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்து நடிப்பின் இமயம் என அகில உலக புகழ் பெற்று செவாலியே, டாக்டர் சிவாஜி கணேசன் என எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு உன்னத கலைஞன் .
மண்ணும், கடல், வானும மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாத மாபெரும் கலைஞன் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் ஆழிக்க முடியாத சேவையை வழங்கிய சிவாஜி கணேசன் அவர்களை வணக்குகிறோம் .